அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதி டிராக்டர் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் பலியாகினர். தாக்குதலில் காயம் அடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதி உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க போலீஸ் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு முழு உதவியை வழங்குவோம் என உஸ்பெகிஸ்தான் உறுதியளித்து உள்ளது.
“பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் விசாரணைக்கு அனைத்து நிலையிலும் உதவியை செய்ய உஸ்பெகிஸ்தான் தயாராக உள்ளது,” என அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஷியோயேவ் கூறிஉள்ளார். உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை இணையதளத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் இரங்கலையும் தெரிவித்து உள்ளார் என குறிப்பிடப்பட்டு உள்ளது.