கிருஷ்ணகிரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு இளம் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி அஷ்வினி, கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் குணமாகாததால், கடந்த 11-ம் தேதி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அஷ்வினி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கடந்த சில வாரங்களில் மட்டும் பல்வேறு காய்ச்சல்களால் சுமார் 20 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.