நிலைமாறுகால நீதி, சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை ஆராய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதங்கள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் விசேடஅறிக்கையாளர் பப்லோ டி கிறிப் இன்று வடக்குக்குச் சென்றார்.
இதன்போது அவர், இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றமைக்குச் சான்றான இடமான முள்ளிவாய்க்காலுக்கும் சென்று அங்குள்ள தற்போதைய நிலைமைகளைப் பார்வையிட்டார்.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.
அதேவேளை, கேப்பாப்பிலவில் மண்மீட்புப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களையும் அவர் சந்தித்தார்.
அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்துக்குச் சென்ற அவர், அங்கு கந்தசுவாமி கோயில் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களையும் சந்தித்து அவர்களின் ஆதங்கங்களைக் கேட்டறிந்தார்.