முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்வதை தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்து நாட்டு மக்கள் மத்தியில் அவரைப் பெரியாளாக்கிவிட வேண்டாம் என்றும், அவரைக் கைதுசெய்வதைத் தடுக்குமாறும் அவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், நீதித்துறையின் சுயாதீன செயற்பாடுகள் மீது தன்னால் தலையிட முடியாது என்றும், அவரைக் கைதுசெய்வது தொடர்பில் நீதித்துறையே முடிவெடுக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துவிட்டார்.