Tuesday , August 26 2025
Home / முக்கிய செய்திகள் / திருப்பதியில் மைத்திரி தரிசனம்!

திருப்பதியில் மைத்திரி தரிசனம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார்.

நேற்று பெங்களூர் வழியாக திருப்பதி சென்ற ஜனாதிபதி மைத்திரி, அவரது துணைவியார் ஜயந்தி புஸ்பா குமாரி, மகன் தஹம் சிறிசேன ஆகியோர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தனர்.

இன்று அதிகாலை அவர்கள் ஏழுமலையான் ஆலயத்தில் சுப்ரபாத சேவையின்போது வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இதையடுத்து. அவர்களுக்கு திருப்பதி ஆலயத்தின் சார்பில், நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளால் ஜனாதிபதி கௌரவிக்கப்பட்டு, ஆலய பிரசாதமும் வழங்கப்பட்டது.

ஜனாதிபதியாக கடந்த 2015ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன, திருப்பதிக்குப் பயணம் மேற்கொண்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஏற்கனவே அவர், 2015 பெப்ரவரி மாதமும், கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதமும் திருப்பதிக்குப் பயணம் மேற்கொண்டு தரிசனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv