அமெரிக்கா: இலங்கைப் படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி போன்ற வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் கடந்த 2ஆம் திகதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த, அமெரிக்கா – இலங்கைக் கடற்படைகளுக்கு இடையிலான முதலாவது ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இலங்கைக்கான அமெரிக்கத் துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், இலங்கை அரசு நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றில் தொடர்ந்து முன்னேற்றத்தைக் காட்டி வருகிறது.
இதுபோன்ற வாய்ப்புகளை உள்ளடக்கிய எமது படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்புத் தொடர்ந்து வளர்ச்சியடையும், என்று கூறியுள்ளார்.