Tuesday , October 14 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஜப்பானில் அரசு டெலிவிஷனில் பணிபுரிந்த பெண் திடீரென மரணம் அடைந்தார். இவர் அதிக நேரம் ஓவர் டைம் பணிபுரிந்ததால் மரணம்

ஜப்பானில் அரசு டெலிவிஷனில் பணிபுரிந்த பெண் திடீரென மரணம் அடைந்தார். இவர் அதிக நேரம் ஓவர் டைம் பணிபுரிந்ததால் மரணம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த பெண் மிவா சடோ (31). இவர் அங்கு அரசு டெலிவி‌ஷனில் பணிபுரிந்து வந்தார்.

இவர் மாதத்தில் 2 நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்தார். 159 மணி நேரம் ஓவர் டைம் (கூடுதல் நேரம்) பணிபுரிந்தார்.

இந்த நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்தார். இவர் அதிக நேரம் ஓவர் டைம் பணிபுரிந்ததால் மரணம் அடைந்து விட்டதாக தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர் எற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அதிக நேரம் பணிபுரிந்ததால் உடல் நலக்கோளாறு காரணமாக இறந்து விட்டார் என கூறப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 2015-ம் ஆண்டு ஓவர் டைம் பார்த்த தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மாதத்துக்கு 100 மணி நேரத்துக்கு மேல் ஓவர் டைம் வேலை பார்த்து வந்தார்.

இவரது மரணத்தை தொடர்ந்து தொழிலாளர்களின் பணி நேரத்தில் அரசு கவனம் செலுத்த தொடங்கியது. சமீபத்தில் சர்வே நடத்தப்பட்டது. அப்போது அதிக நேரம் ஓவர் டைம் பார்க்கும் தொழிலாளர்கள் பட்டியலில் ஜப்பான் 5-வது இடம் பிடித்துள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மாதத்துக்கு 80 மணி நேரம் ஓவர் டைம் பார்ப்பது தெரிய வந்துள்ளது.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …