புதிய அரசமைப்புத் தொடர்பில் அப்பாவி சிங்கள மக்களை நீங்கள் தவறாக வழிநடத்துகின்றீர்கள் என்று மஹிந்த அணியைச் சேர்ந்த ஜி.எல்.பீரிஸிடம் நேருக்கு நேர் காட்டமாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்ததாக, பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவரின் கொழும்பு இல்லத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இரவுநேர விருந்து நிகழ்வொன்றில் பங்கேற்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இந்தக் குற்றச்சாட்டை ஜி.எல்.பீரிஸிடம் முன்வைத்ததாக அது தொடர்பான புகைப்படத்தையும் தனது ருவிட்டர் தளத்தில் ஹர்ஷ டி சில்வா பதிவிட்டுள்ளார்.
இந்தக் கருத்துக்கு அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோரும் சாட்சி என்றும் ஹர்ஷ டி சில்வா அதில் கூறியுள்ளார்.