பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ்வை வெற்றியாளராக அறிவித்தது அநியாயம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது.
நூறாவது நாள் நிகழ்ச்சியில் ஓவியா, பரணி உட்பட பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டு 50 லட்சம் பரிசு தொகையை தட்டி சென்றார்.
இந்நிலையில், ஆரவ்வின் வெற்றியை விமர்சித்து நடிகை கஸ்தூரி டுவிட் செய்துள்ளார்.
அந்த பதிவில், #BiggBossGrandFinale ஆராம்? ஆரவாம். ஆரு? ஆரவ். ஆரவ்வ்வ்வ்வ்வ்வ்! #அநியாயம் என்று டுவிட் செய்து தனது அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார்.
#BiggBossGrandFinale
ஆராம் ?
ஆரவாம்.
ஆரு ?
ஆரவ்.
ஆரவ்வ்வ்வ்வ்வ்வ் !#அநியாயம். pic.twitter.com/vSALY3eauA— kasturi shankar (@KasthuriShankar) 30. september 2017