லிபியா கடற்பகுதியில் இன்று காலை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 90 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுவரை லிபியா கடற்பகுதியில் 10 பேரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. அதில் 8 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் லிபியாவைச் சேர்ந்தவர்கள் என என்றும் இடம்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளனர்.
அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.