Monday , November 18 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / சர்வதேச ஆயுத விற்பனை 8 சதவீதம் அதிகரிப்பு – சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம்

சர்வதேச ஆயுத விற்பனை 8 சதவீதம் அதிகரிப்பு – சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம்

சர்வதேசஆயுத  விற்பனை 8 சதவீதம் அதிகரிப்பு – சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம்

பனிப்போர் காலம் முடிவுற்ற பின்னர் நடைபெற்றிருக்கும் சர்வதேச ஆயுத விற்பனையில், எப்போதும் இல்லாததை விட இப்போது ஆயுத விற்பனை அதிகரித்து காணப்படுவதாக புதியதொரு அறிக்கை தெரிவிக்கிறது.

2012 முதல் 2016 வரையான முக்கிய ஆயுதங்களின் உலக அளவிலான மொத்த இறக்குமதியை, இந்த காலத்திற்கு முந்தைய 5 ஆண்டு காலத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் கூறியிருக்கிறது.

இந்த ஒட்டு மொத்த ஆயுத கொள்முதலில் மூன்றில் ஒரு பகுதியை மத்திய கிழக்கு நாடுகளும், வளைகுடா நாடுகளும் செய்துள்ளன. இந்தியாவுக்கு அடுத்ததாக உலகிலேயே ஆயுதங்கள் அதிகமாக இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக சௌதி அரேபியா மாறியுள்ளது.

நைஜீரியா: ஆயுதம் வாங்கியது குறித்து விசாரணை

ஆயுத விற்பனையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐந்து நாடுகளும் 75 சதவீத ஆயுத ஏற்றுமதியை வழங்கியிருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …