Sunday , August 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / 3 நாளில் 7,706 பேர் கைது: சவுதியில் அதிரடி!

3 நாளில் 7,706 பேர் கைது: சவுதியில் அதிரடி!

சவுதியில் 3 நாளில் 7,706 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3,312 பேர் சவுதி குடிமக்கள் என்றும் மீதமுள்ள 4,494 பேர் வெளிநாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த் அதிரடி நடவடிக்கைகள் குறித்து சவுதி ஊடகமான அல்-மடினா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை 21 ஆம் தேதியில் இருந்து 23 ஆம் தேதி வரை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த நடவடிக்கையின் போது 434 வாகனங்கள் பிடிப்பட்டதாகவும் அதில் 37 வாகனங்கள் திருடு போன வாகனங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் 60 வாகனங்கள் குற்ற செயல்கள் செய்ய பயன்படுத்தப்பட்டதாகவும், 164 வாகனங்களுக்கு சரியான ஆவணங்க: இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி துப்பாக்கி, கத்தி என 749 ஆயுதங்கள், 348 போதை மாத்திரைகள், 1,160 கிராம் கஞ்சா, 218 பாட்டில்கள், 18 ஜெர்ரி கேன்கள் மற்றும் 18 பீப்பாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …