Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் 76 பேர் கைது

தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் 76 பேர் கைது

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னரான சோதனை நடவடிக்கைகளில், இதுவரை சந்தேகத்தின் பேரில் 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலையும், இரவும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பல்வேறு பிரதேசங்களில் வைத்து 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

திரப்பனையில் 4 பேரும், இரக்குவானையில் 3 பேரும், வவுணதீவு மற்றும் மீகலாவை பிரதேசங்களில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், வத்தளை, பண்டாரகம, பலாங்கொடை, மாத்தளை மற்றும் தெல்தெனிய பகுகளில் தலா ஒருவர் வீதம் கைது செய்யப்பட்டுள்ளார.

பண்டாரகமயில் கைது செய்யப்பட்டவர், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உதவிப் பணிப்பாளராக கடமையாற்றுபராவார்.

அவர், தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என அவரது பேஸ்புக் கணக்கின் பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

திரப்பனையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்து, துப்பாக்கி ஒன்றும், 12 தோட்டாக்களும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv