நாட்டில் மீண்டும் டெங்குநோய் தீவிரமாகப் பரவி வருகின்றது. ஜனவரி மாதத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 203 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள் ளது.
இடையிடையே பெய்யும் மழை காரணமாகவே டெங்குநோய் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட் டுள்ளது. டெங்கு நுளம்பு பெருகாத வகையில் சுற்றாடலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இலங்கைக்கு டெங்கு நோயால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. சுமார் ஒரு இலட்சம்பேர் வரையானோர் பாதிக்கப்பட்டனர். அதன்பின்னர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத் தப்பட்டிருந்தமை குறிப்பி டத்தக்கது.