Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / முன்னாள் போராளிகள் 50 பேருக்கு கிடைத்த வாய்ப்பு

முன்னாள் போராளிகள் 50 பேருக்கு கிடைத்த வாய்ப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக புனர்வாழ்வளிக்கப்பட்ட 50 முன்னாள் போராளிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

அவர்களுக்கு 55 வயதிற்குப் பின்னர் ஓய்வூதியக் கொடுப்பனவும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பலாலியில் உள்ள இராணுவப் பண்ணைகளில் தென்னை மரங்களைப் பராமரிப்பது இவர்களின் பிரதான வேலையாக இருக்கும். இதற்காக மாதாந்தக் கொடுப்பனவாக 40,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv