மெக்ஸிகோ நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானதாக கூறப்பட்டுள்ளது. மெக்சிகோவில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 புள்ளிகளாக பதிவு மெக்சிகோ சிட்டி: வடஅமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் கடந்த 19ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 7.1 புள்ளிகளாக பதிவாகி இருந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பெரும் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. தலைநகரம் மெக்சிகோ சிட்டி மற்றும் மெக்சிகோ சிட்டி மாகாணம், பிபூபலா, கவுர்வேரோ, டாக்ஸ்கா ஆகிய மாகாணங்களில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் 300-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதில் சிக்கி சுமார் 260 பேர் இறந்துள்ளனர்.
மீட்பு பணிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என மக்கள் மத்தியில் பீதி நிலவிவந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின.
அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை.