Thursday , April 25 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2.287 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2.287 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2.287 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2,287 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009 முதல் 14ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட 160 சதவீதம் அதிகமாகும்.

மாநில வாரியாக…

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி:

* மேற்கு வங்க மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6336 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 295 சதவீதம் அதிமாகும்.

* தெலுங்கானா மாநில ரயில்வே திட்டங்களுக்காக 1729 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலத்திற்கு 14-15 மற்றும் 16- 17 காலகட்டத்தில் 601 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ராஜஸ்தான் மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3495 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 412 சதவீதம் அதிகமாகும்.

* ஒடிசா மாநில ரயில்வே திட்டத்திற்கு 5,102 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 292 சதவீதம் அதிகமாகும்.

* அசாம் மற்றும் வடகிழக்கு மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.5586 கோடி அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 151 சதவீதம் அதிகமாகும்.

* மத்தியபிரதேச மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.5,376 கோடி ஒதுக்கீடு. இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 354 சதவீதம் அதிகமாகும்.

* கேரள மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.1,206 கோடி ஒதுக்கீடு இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 121 சதவீதம் அதிகமாகும்.

* கர்நாடக மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,174 கோடி ஒதுக்கீடு இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 163 சதவீதம் அதிகம்.

* ஜம்மு காஷ்மீர் மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.1,880 கோடி ஒதுக்கீடு இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 68 சதவீதம் அதிகம்.

* ஜார்க்கண்ட் மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.2,583 கோடி ஒதுக்கீடு. இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 238 சதவீதம் அதிகமாகும்.

* இமாச்சல பிரதேச மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.375 கோடி இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 90 சதவீதம் அதிகமாகும்.

* அரியானா மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.1,247 கோடி இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 102 சதவீதம் அதிகமுாகும்.

* குஜராத் மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,994 கோடி இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 319 சதவீதம் அதிகமாகும்.

* டில்லி ரயில்வே திட்டங்களுக்காக ரூ.444 கோடி இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 47 சதவீதம் அதிகமாகும்.

* சத்தீஸகர் மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,676 கோடி இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 275 சதவீதம் அதிகமாகும்.

* பீஹார் மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,696 கோடி இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 97 சதவீதம் அதிகம்.

* ஆந்திரா மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,406 கோடி இது கடந்த 2009-14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட 148 சதவீதம் அதிகம்.

நடவடிக்கை:

மேலும் பட்ஜெட்டில், சரக்கு ரயில் வளர்ச்சியில் குறைவு மற்றும் சம்பள கமிஷன் இடையிலான இடைவெளி குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள்
பாதுகாப்பு, பயணிகள் வசதியை அதிகபடுத்தவும், ரயில் நிலையங்களை மேம்படுத்தவும், டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …