கண்டி, ஹாரகம ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த சுமார் 200 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக, இன்று காலை கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னரே, இவ்வாறு திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading…