Wednesday , January 22 2025
Home / சினிமா செய்திகள் / 2.0 எல்லாம் ஒரு படமா…? இப்படி செய்துவிட்டாரே ஷங்கர்!

2.0 எல்லாம் ஒரு படமா…? இப்படி செய்துவிட்டாரே ஷங்கர்!

நீண்ட கால இழுபறிக்கு பின்னர் ரஜினி நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே வேர லெவலில் இருந்த நிலையில் அவை அனைத்தையும் படம் பூர்த்தி செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

செல்போன்களுக்கு எதிராக அக்‌ஷயகுமார் தொடுக்கும் போரும், அந்த போரில் இருந்து மனிதர்களை காப்பற்ற சிட்டியை தட்டி எழுப்பும் ரஜினிக்கும் இடையே நடக்கும் டெக்னாலஜி போர்தான் இந்த படத்தின் ஒன் லைன் கதை.

ரசிகர்களுக்கு பிரம்மாண்ட விருந்தை கொடுத்துள்ளார் ஷங்கர். இத்தனை நாள் காத்திருந்ததற்கு படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் செம ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. இந்த படத்தை மிகவும் மெனக்கட்டு சிறப்பாக நடித்துள்ளனர் ரஜினி மற்றும் அக்‌ஷ்ய குமார். நிச்சயம் அவர்களது உழைப்பு வீண்போகவில்லை.

எமி ஜாக்சனை பாடலுக்கும் கவர்ச்சிக்கும் மட்டுமே பயன்படுத்தாமல் அவருக்கும் நல்ல ஒரு கதாபாத்திரத்தை கொடுத்துள்ளது சிறப்பு. அதே போல் படத்தை ஹாலிவுட் தரத்திற்கு ஒப்பிட வைப்பதற்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையும் ஒரு முக்கிய காரணம்.

வெறும் டெக்னாலஜி, கிராபிக்ஸ் காட்சிகள், 3டி எஃபெக்ட்டை மட்டுமே நம்பாமல் நடிகர்களை சரியான வகையில் உபயோகித்தது, அழுத்தமான கருத்துடன் கூடிய திரைக்கதை அமைத்து தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளார் ஷங்கர்.

ஷங்கரால் இப்படி கூட கற்பனை செய்ய முடியுமா? என்ற அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் உள்ளது. கற்பனையை விஷூவலாக காட்ட அவர் எடுத்திருக்கும் முயற்சிகள் அபரீதமானவை. ஷங்கரின் முயற்சிக்கு ஹாட்ஸ் ஆஃப்.

படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ஆக, மொத்தம் 2.0 ஒரு படம் மட்டுமே அல்ல தமிழ் சினிமாவில் ஒரு பெஞ்ச் மார்க் என்றுதான் கூற வேண்டும்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv