அமெரிக்கா – பனாமா நகர கோர விபத்தில் 16 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பனாமா நகரம் அருகே செங்குத்தான பள்ளத்தாக்கு வழியாக சென்ற பஸ் சாலையை விட்டு விலகி ஆற்றுப் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த கோர விபத்தில் தோட்டத் தொழிலாளர்கள் 16 பேர் பரிதாபமாக பலியாகினர்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கோக்லே மாகாணத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பழம் பறிக்கும் வேலைக்காக முப்பதுக்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்களை ஏற்றியவாறு தனியாருக்கு சொந்தமான ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.
வழியில் ஆற்றுப் பாலத்தை ஒட்டியுள்ள செங்குத்தான மலைப் பாதையில் கீழ்நோக்கி சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாதையை விட்டு விலகி, திடீரென்று ஆற்றுப் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பக்கவாட்டில் கவிழ்ந்தது.
பனாமா நகரின் கிழக்கே சுமார் 180 கிலோமீட்டர் தூரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாத பகுதியில் நடைபெற்ற இந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவ்விபத்து தொடர்பான தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர உதவிப் படையினர், படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களை மீட்டு, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.