வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளுக்கு திருமணம்: குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
வங்காள தேசத்தில் திருமண வயது வரம்புச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் புதிய திருமண சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஆண்களுக்கு திருமண வயது 21 எனவும், பெண்களுக்கு 18 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய திருமண சட்டத்தில் சில விதிவிலக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் 14 வயது பூர்த்தி அடைந்த சிறுமிகளுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சட்டத்தால் வங்காளதேசத்தில் 14 வயது சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற அதிகம் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த புதிய சட்டதிருத்ததிற்கு குழந்தைகள் நல ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு சில அமைப்புகள் இச்சட்டத்திற்கு வரவேற்பு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.