Sunday , August 24 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / 10ம் வகுப்பு மாணவரின் உயிரை பறித்த ராகிங்…

10ம் வகுப்பு மாணவரின் உயிரை பறித்த ராகிங்…

திருச்சி மாவட்டம் நெருஞ்சலக்குடி ஊராட்சியில் பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்தார் ரஞ்சித் என்ற மாணவர்.

இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற ரஞ்சித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரஞ்சித் வீட்டில் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது சாவிற்கு காரணமான 4 மாணவர்களின் பெயரை கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள் 4 பேர், அவரை தொடர்ந்து அடித்து, ராகிங் செய்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த ரஞ்சித் வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு, சக மாணவர்கள் சிலர் ராகிங் செய்து ரஞ்சித்தின் கையை உடைத்தாக பள்ளி ஆசிரியரிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 4 மாணவர்களின் தொடர் துன்புறுத்தலால் ரஞ்சித் தற்கொலை செய்துள்ளார். அந்த 4 மாணவர்களை கைது செய்யும் வரை ரஞ்சித் உடலை வாங்கப் போவதில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv