Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / ஆர்.கே.நகரில் ஒரே நாளில் தாக்கலான 101 வேட்புமனுக்கள்

ஆர்.கே.நகரில் ஒரே நாளில் தாக்கலான 101 வேட்புமனுக்கள்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 101 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சுயேட்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மனுதாக்கல் செய்தவர்களின் நடிகர் விஷால் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். நேற்று வேட்புமனுதாக்கல் செய்த 101 பேர்களையும் சேர்த்து மொத்தம் 131 பேர் ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர்.

131 பேர்களின் சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்ய வாய்ப்பில்லை என்பதால் இந்த தேர்தலுக்கு வாக்குச்சீட்டு பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்படவுள்ள நிலையில் வரும் 7ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி தேதி ஆகும். அன்றுதான் இறுதி வேட்பாளர் பட்டியல் தெரியவரும்

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv