Sunday , August 24 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / சிறுமி பலாத்காரம் : தலையில் கல்லை போட்டு கொலை

சிறுமி பலாத்காரம் : தலையில் கல்லை போட்டு கொலை

காஷ்மீர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இது போன்ற மேலும் ஒரு சம்பவம் சத்தீஸ்கரில் நடைபெற்றுள்ளது.

கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் சென்றிருந்தார்.

அப்போது திருமணத்திற்கு வந்திருந்த மணமகனின் நண்பர், திருமண ஊர்வலம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.

அதன் பிறகு அந்த கிராமத்தில் உள்ள வறண்ட ஆற்று பகுதியில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்து, தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் சிறுமியின் உடலை அங்கேயே புதைத்துவிட்டார்.

சிறுமியை காணாது போலீஸில் புகார் அளிக்கப்பட்ட பின்னர், இந்த விவகாரம் வெளியே தெரிந்து, அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv