Thursday , November 21 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / நைஜீரியா போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு

நைஜீரியா போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர்.

இதனிடையே, நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் போர்னோ மாவட்ட தலைநகரான மைடுகுரி நகரை ஒட்டியுள்ள ஆடமாவா மாநிலத்திற்கு உட்பட்ட முபி நகரில் உள்ள மசூதி அருகே நேற்று போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்ததோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv