Friday , November 22 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஜெருசலேம்: துப்பாக்கிச் சூடு நடந்த பழைமையான மசூதி மீண்டும் திறப்பு – இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி

ஜெருசலேம்: துப்பாக்கிச் சூடு நடந்த பழைமையான மசூதி மீண்டும் திறப்பு – இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி

இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேமில் பாலஸ்தீனியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் பலியானதால் மூடப்பட்ட அல் அக்ஸா மசூதி இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் அங்குள்ள இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாக தீராப்பகை நீடித்து வருகிறது. இஸ்ரேல் நாட்டை மீண்டும் தங்கள் வசப்படுத்த பாலஸ்தீனமும், பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமித்து கொள்ள இஸ்ரேலும் முயன்று வருகின்றன.

இதேபோல், இஸ்ரேல் நாட்டு மக்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஜென்மப்பகை நிலவி வருகிறது. இஸ்லாமியர்களின் மிகவும் பழைமையானதும், மூன்றாவது புனிதத்தலமாகவும் கருதப்படும் அல் அக்ஸா மசூதி இஸ்ரேல் நாட்டில் உள்ள பழைய ஜெருசலேம் நகரில் அமைந்துள்ளது. இந்த மசூதி ஜோர்டான் அரசின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டின்கீழ் இருந்து வருகிறது.

மசூதியின் மேற்குப்புற மதில் சுவரை தங்களது புனித சின்னமாக யூத இனத்தவர்கள் கருதுகின்றனர். ஏழாம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த இந்த மசூதியை மீட்பதற்காக பல்வேறு தாக்குதல்களை பாலஸ்தீனியர்கள் நடத்தி வந்துள்ளனர்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்த மசூதியில் ஜும்மா தொழுமையில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் இந்த மசூதி அருகே பயங்கர ஆயுதங்களுடன் வந்த மூன்று பாலஸ்தீனியர்கள் அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் மீது ஆவேசமாக இயந்திர துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த போலீசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இருதரப்பினருக்கும் இடையிலான மோதலில் இரு போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும் ஒரு அதிகாரி படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்த வந்த மூன்று பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக பாலஸ்தீன அதிபர் மஹமவுட் அப்பாஸ் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோர் தொலைபேசி மூலம் பேசியதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இன்றைய தாக்குதலை தொடர்ந்து அல் அக்ஸா மசூதி மூடப்பட்டது. பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து இன்று ஜும்மா தொழுகைக்காக வந்த இஸ்லாமியர்கள் வேறு வழியில்லாமல் அருகாமையில் உள்ள சாலையோரங்களில் தொழுகை நடத்தினர்.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …