தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள்; 10 தங்க பதக்கங்களை வென்றது இந்தியா
நேபாள நாட்டில் தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 21ந்தேதி தொடங்கின. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் விளையாடின.
இந்த நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 10 தங்க பதக்கங்களை கைப்பற்றி உள்ளனர். அவற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 7 தங்கம் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3 தங்கம் என 10 தங்க பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தன. 3 வெண்கல பதக்கங்களையும் வென்று மொத்தம் 13 பதக்கங்களுடன் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
தொடர்ந்து நேபாளம் 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கங்களுடன் 21 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.
பாகிஸ்தான் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது.
இதேபோன்று இலங்கை 3 தங்கம் மற்றும் 5 வெண்கல பதக்கங்களும், அதனை தொடர்ந்து வங்காளதேசம் 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களையும் கைப்பற்றி உள்ளன. பூடானுக்கு ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.