வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் இரண்டு முறை ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
இதனால் வடகொரியா இந்த மாதமும் சோதனை நடத்தினால் வியப்பதற்கில்லை என்று அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வின் இயக்குநர் மைக் போம்போ கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் போருக்கு தயாராக இருப்பதாக கூறியதால், வடகொரியா ஆகஸ்ட் மத்தியில் குவாம் தீவு அருகே சென்று விழும்படி சக்தி வாய்ந்த ஏவுகணைகளை பரிசோதிக்க திட்டமிட்டுள்ளது.
வட கொரியா உடனான அணுசக்தி யுத்தம் தவிர்க்க முடியாதது அல்ல” என கூறினார்.
அமெரிக்காவின் 7,000 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. குவாம் இந்த தீவு அமெரிக்காவின் கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அங்கிருந்த இரண்டு பி-1பி சூப்பர்சானிக் போர் விமானங்கள் வட கொரியாவிற்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.