Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் எடுத்த அதிரடி முடிவு!

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் எடுத்த அதிரடி முடிவு!

ஐக்கிய தேசிய கட்சியின் எட்டு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர்.அத்துடன் 2019 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போதும் சுயாதீன அணியாக செயற்படுவதற்கு செயற்படவுள்ளதாகவும் அந்த அணி குறிப்பிட்டுள்ளது.

கிடைக்கப்பெற்றிருக்கும் இந்த ஒரு வருடத்தில் சகல மக்களுக்கும் சமமான சலுகைகள் கிடைக்கப்பெறவேண்டும்.கடந்த மூன்றரை வருடங்களிலும் நாட்டின் சகல பகுதிகளுக்கும் முழுமையான சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

அவ்வாறு மக்களின் ஆட்சிக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிர்ப்பினை வெளியிடுவதற்காகவே சுயாதீனமாக இயங்குவதற்கான தீர்மானத்தை எடுத்தாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏஷான் விதானகே குறிப்பிட்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv