Tuesday , October 14 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / உலகின் வயதான பெண்மணி ஜமைக்கா நாட்டை சேர்ந்த வைலட் பிரவுன் நீண்ட ஆயுள் ரகசியம்

உலகின் வயதான பெண்மணி ஜமைக்கா நாட்டை சேர்ந்த வைலட் பிரவுன் நீண்ட ஆயுள் ரகசியம்

உலகின் வயதான பெண்மணி என்ற பெருமையை ஜமைக்கா நாட்டை சேர்ந்த வைலட் பிரவுன் பெற்றுள்ளார்.

ஜமைக்காவின் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் வைலட் பிரவுன் (117), இவர் தான் தற்போது உலகிலேயே வயதான பெண் ஆவார். வைலட் கடந்த 1900 ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார். கடந்த மாதம் தான் இவர் தனது 117வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார்.

பிரவுன் தனது 97 வயதான மகனுடன் தற்போது வசித்து வருகிறார். தனது ஆயுள் ரகசியத்தை பற்றி அவர் கூறுகையில், நான் கடுமையாக உழைப்பேன்.

பன்றி, கோழி தவிர எல்லா உணவுகளையும் நான் சரியான அளவில் சாப்பிடுவேன் என அவர் கூறியுள்ளார். இதை தவிர என் நீண்ட ஆயுளுக்கு ரகசியம் வேறேதுமில்லை எனவும் வைலட் கூறியுள்ளார்.

உலகின் வயதான பெண்ணாக கருதப்பட்ட இத்தாலியின் எம்மா மார்ட்டின் லூகியாவின் மறைவுக்கு பிறகு அந்த பெருமைக்கு வைலட் தற்போது சொந்தகாரராக ஆகியுள்ளார்.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …