Sunday , December 22 2024
Home / முக்கிய செய்திகள் / இராணுவத்தை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கவே காணாமல்போனோர் சட்டமூலம்

இராணுவத்தை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கவே காணாமல்போனோர் சட்டமூலம்

இராணுவத்தையும், போர் வெற்றி வீரர்களையும் சர்வதேசத்திடம் காட்டிக்கொடுப்பதற்காகவே காணாமால்போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

மல்வத்து பீடம் மற்றும் மாகாநாயகர்களுக்கு அவர் இன்று அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பமிட்டுள்ள காணாமல்போனர் சட்டமூலம் தொடர்பில் மல்வத்து பீடம் மற்றும் மாகாநாயக்க தேரர்களின் கவனம் செலுத்த வேண்டிய ஆறு காரணிகளாவது உள்ளன.

சாட்சிகளைப் பெற்றுக்கொண்டு நீதிமன்றம் செல்ல முடியும், சர்வதேச ரீதயில்நிதியை பெற்றுக்கொள்ள முடியும், எந்தவொரு அறிக்கையையும், பொருட்களையும் சாட்சிகளாக ஏற்றுக்கொள்ள முடியும், புலனாய்வுப் பிரிவிடம் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என ஆறு காரணிகளால் சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் வகையிலேயே சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மகாநாயகர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

ங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv