இந்தோனேசியாவில் 73 வயது பெண்ணை 15 வயது சிறுவன் மணந்த சம்பவம் அப்பகுதியில் சமீப கால பரபரப்பு பேச்சாக உள்ளது.
75 வயது மூதாட்டி ரொகாயா பின்டியுடன் சிறுவன் செலாமெட் ரியாடி.
ஜகர்த்தா:
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் காராங் என்டா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் செலாமெட் ரியாடி (15).
சமீபத்தில் இவன் மலேரியா காய்ச்சலால் கடும் அவதிப்பட்டான். அப்போது அவனை அண்டை வீட்டில் வசிக்கும் 75 வயது மூதாட்டி ரொகாயா பின்டி கியாகஸ் முகமது ஜாக்பார் என்பவர் நல்ல முறையில் கவனித்துக் கொண்டார்.
இவரது அன்பு செலாமெட் ரியாடியை கவர்ந்தது. அதுவே நாளடைவில் காதலாக மாறியது.
அதை தொடர்ந்து சிறுவன் செலாமெட் மூதாட்டி ரொகாயாவை திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டை செய்தான். அதை அறிந்த அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றனர்.
தங்களது திருமணத்தை நிறுத்தினால் தற்கொலை செய்வோம் என மிரட்டினர். அதையடுத்து இவர்கள் திருமணம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவர்களின் சொந்த கிராமமான காராங் என்டாக்கில் நடந்தது.
அதில் குடும்பத்தினர் உள்பட கிராம மக்கள் வந்து வாழ்த்தினர். சிறுவனை திருமணம் செய்த மூதாட்டி எராகியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார்.
சிறுவன் செலாமெட்டின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே, அவனது தாய் வேறு ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். இதனால் அவனுக்கு தாயின் அன்பும், பாசமும் கிடைக்கவில்லை.
அன்புக்கு ஏங்கிய அவன் மலேரியா காய்ச்சலில் விழுந்த போது ரொகியாவின், அன்புக்கு அடிமையாகி அவரையே திருமணம் செய்து கொண்டான். இவர்களின் திருமணமே இந்தோனேசியாவின் சமீப கால பரபரப்பு பேச்சாக உள்ளது.