Thursday , November 21 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / இடி மின்னல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பம் – ஒடிசா அரசு அறிவிப்பு

இடி மின்னல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பம் – ஒடிசா அரசு அறிவிப்பு

ஒடிசா மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டுமே மின்னல் தாக்கியதில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக புவனேஸ்வரில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலர் ஏ.பி.பதி கூறுகையில், ‘மின்னல் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கக் கூடிய தொழில்நுட்பம் சில மாநிலங்களில் நல்ல பலனளித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் நமது மாநிலத்திற்கான பயன்பாடு மற்றும் பொருந்தும் தன்மை குறித்து ஆய்வு செய்து மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை மின்னல் தாக்குதலிலிருந்து காக்க முடியும்’ என தெரிவித்தார்.

ஒடிசா விண்வெளி மையத்தின் தலைமை நிர்வாகி சந்தீப் திரிபாதி கூறும்போது, ‘சூப்பர் சென்சார்கள் மூலம் மின்னல் தாக்கும் பகுதிகளை சுமார் 30 முதல் 45 நிமிடங்களுக்கு முன்னரே அறிந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடியும்’ என்றார்.

மேலும் நவீன ராடார் கருவிகள் மூலம் மின்னல் விழும் பகுதியினை அறிந்து, தொலைக்காட்சி, வானொலி மற்றும் கைப்பேசி வழியாகவும் எச்சரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் புயல் காற்று, இடி, வெள்ளம் போன்ற பாதிப்புகள் குறித்தும் முன்கூட்டியே அறிய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv