Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / அம்பாந்தோட்டை துறைமுகத்தை மஹிந்த ஆட்சியில் கைப்பற்றுவோம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை மஹிந்த ஆட்சியில் கைப்பற்றுவோம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனத்துக்குக் குத்தகைக்கு வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், மஹிந்த ஆட்சியின்போது அது மீளப்பெறப்பட்டு மக்கள் மயப்படுத்தப்படும் என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை முறைமுகத்தை சீனாவுக்குக் குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளானது நாட்டுக்கு துக்கதினமாகும். குறித்த உடன்படிக்கை உரிய வகையில் கைச்சாத்திடப்படவில்லை. அது செல்லுபடியற்றதாகும். எனவே, மஹிந்த ஆட்சியின்போது அதை மக்கள் மயப்பபடுத்துவோம். இது உறுதி.

இலங்கை, இந்திய உடன்படிக்கையை எம்மால் இரத்துசெய்யமுடியாமல்போனாலும், வடக்கு, கிழக்கைப் பிரித்து அது மீண்டும் இணைவதைத் தடுத்துள்ளோம்” – என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv