Tuesday , October 14 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / அமெரிக்க சிறையில் கலவரம்: 7 கைதிகள் படுகொலை

அமெரிக்க சிறையில் கலவரம்: 7 கைதிகள் படுகொலை

அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 7 கைதிகள் கொள்ளப்பட்டனர்

அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் லீசி என்ற இடத்தில் சிறைச்சாலை உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று சிறையில் உள்ள கைதிகள் 2 பிரிவுகளாகி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது. அப்போது சிறையில் குறைந்த அளவே காவலர்கள் இருந்தனர்.

அவர்கள் கலவரத்தை அடக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இருந்தும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கைதிகள் ஏற்கனவே தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரி குத்தி தாக்குதல் நடத்தினர்.

இக்கலவரத்தில் சிறைக்கைதிகள் 7 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலவரத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv