Tuesday , October 14 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / துப்பாக்கியை கண்டே அஞ்சாதவர்கள் தொப்பியை பார்த்தா பயப்பட போகிறோம்: தமிழிசை

துப்பாக்கியை கண்டே அஞ்சாதவர்கள் தொப்பியை பார்த்தா பயப்பட போகிறோம்: தமிழிசை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தமிழிசை செளந்திரராஜன்

அப்போது செய்தியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழிசை ‘மீண்டும் தொப்பி சின்னத்தை தினகரனுக்கு கொடுக்க கூடாது என்று தேர்தல் கமிசனிடம் வலியுறுத்துவோம். கடந்த முறை எத்தனை லட்சம் தொப்பிகளை அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் இறக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே’ என்று கூறினார்.

அப்போது நிருபர் ஒருவர் ‘தொப்பி சின்னத்தை பார்த்து உங்களுக்கு பயமா? என்று கேட்டபோது, ‘நாங்கள் துப்பாக்கியை பார்த்தே பயப்பட்டதில்லை, தொப்பியை பார்த்தா பயப்பட போகிறோம், வாளை பார்த்தே பயப்பட்டதில்லை, தொப்பியை பார்த்து எங்களுக்கு என்ன பயம்? எந்தவித முறைகேடும் தொப்பி சின்னத்தால் நிகழக் கூடாது என்பதற்காகவே அவருக்கு தொப்பி சின்னம் மீண்டும் தரக்கூடாது என்று வலியுறுத்துகிறோம்’ என்று தமிழிசை செளந்திரராஜன் கூறினார்.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …