அரியலூர்: நீட்’ தேர்வில் விலக்கு வரும் என, மத்திய அரசு நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டது’ என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் குழுமூரில், ‛நீட்’ காரணமாக டாக்டர் சீட் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் தந்தை மற்றும் சகோதரரை ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கை என்பது சாத்தியம் இல்லாதது. மாநில கல்வி கொள்கையில் படித்தவர்களுக்கு மருத்துவம் படிக்க முன்னுரிமை தர வேண்டும்.
நீட் தேர்வில் விலக்கு வரும் என நம்பவைத்து மத்திய அரசு கழுத்தறுத்துவிட்டது. அனிதா மரணத்திற்கு மத்திய அரசே முழுபொறுப்பு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.