சென்னை: ஜெனிவாவில் வைகோ மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்ததற்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஜெனிவாவில் வைகோ மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது.
எதிர்காலத்தில் இது போல் நிகழா வண்ணம் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.