இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் குறியீடு 512 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 77.58 புள்ளிகள் உயர்ந்து 31,749.29 புள்ளிகளாக உள்ளது. ரியல் எஸ்டேட், சுகாதாரம், ஆட்டோ, உலோகம் மற்றும் மூலதன பொருட்கள் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 10.20 புள்ளிகள் அதிகரித்து 9,925.10 புள்ளிகளாக உள்ளது.
எம் & எம், டாக்டர் ரெட்டி, என்டிபிசி மற்றும் சன் பார்மா போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.57% வரை அதிகரித்திருந்தது.
ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.03% உயர்ந்து காணப்பட்டது. ஹாங்காங் மற்றும் சீன பங்குச்சந்தைக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.09% வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.