Today palan 02.05.2020 | இன்றைய ராசிபலன் 02.05.2020
மேஷம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவி கிடைத்து மன அமைதி ஏற்படும்.
ரிஷபம்
இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து சந்தோஷம் கூடும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
சிம்மம்
இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோக ரீதியான தூர பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
துலாம்
இன்று பயணங்கள் மூலம் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.
தனுசு
இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.
கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.
மீனம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வை அடைய முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
ராசி என்றால் என்ன???

இராசிகள்-12:
1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம்,
4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி,
7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு,
10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பன.
வான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள போதும்; அவற்றுள் சிலவே பூமியின் Zodiac எனப்படும் இராசி மண்டல வலயத்தில் (சுற்றுப்பாதைக்குள்) அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன. இவ் ராசி மண்டல வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்பெற்றுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (2 1/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக அமைந்துள்ளது.
நட்சத்திரங்கள் – 27:
1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை,
4. ரோகினி, 5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,
7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,
10. மகம், 11. பூரம், 12. உத்திரம்,
13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. ஸ்வாதி,
16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை,
19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம்,
22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம்,
25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.
நட்சத்திரங்களும் ராசிகளும்:
சோதிட கணிப்பின் படி; பூமியில் பட்டிபோல் சுற்றியுள்ள (கற்பனையான) இராசி மண்டல வலயம்; பூமி சூரியனைச் சுற்றும் போது இராசி மண்டல வலயத்தில் உள்ள ஏதோ ஒரு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. சந்திரன் ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே அப்போதய நட்சத்திரமும் அதன் பாதமும் என சோதிடம் கூறுகின்றது.
சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ-ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப-ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படியே ஒவ்வொரு தமிழ் மாதமும் அடுத்துள்ள ஒவ்வொரு ராசியில் சஞ்சரித்து, தொடர்ந்து 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். ஜோதிட கணிப்பின் படி சூரியன் தனது சுற்றை மேஷராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீனராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை கடந்து செல்ல (12-ராசிகளையும் சுற்றிவர) 365.25 நாட்கள் எடுக்கின்றது.
Zodiac எனப்படும் இராசி மண்டல வலயம் நீள் வட்டத்தின் அமைப்பை கொண்டதனால் ஒருவருடைய ஜாதக-குறிப்பு கணிக்கும் போது நீள்வட்டமாக வரைதல் வழக்கமாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் இவ் வழக்கம் திரிபுற்று தற்போது நீள் சதுரமாக வரையப்படுகிறது. ஜாதக-குறிப்பு என்பது சிசு பிறந்த தற்பரையில் பேரண்டத்தின் கோசர (கிரக) நிலையையும், லக்கினத்தையும் குறிப்பதாகும்.
பூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக “/ல” என குறிக்கப்பட்டிருக்கும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப்படுகின்றது.
நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.
அத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.
அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக “அதிர்ஷ்டக் கற்களை” பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் “உச்சம்” பெற்றதாக கணிக்கப்பெறுகின்றது. இதை “கிரக வலிமை” என்பார்கள்.
ஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் “உயிர்க் காந்தம்” (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.
வேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் பொழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது. அந்த உயிக் காந்தப் புலத்தின் தன்மையை எடுத்துக் காட்டுவதெ எமது ஜாதகக்-குறிப்பு என்று கூறலாம்.
விளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளி யின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.
மேலும், வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.
அது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனை ஜாதக-குறிப்பின் அடிப்படையில் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.
கிரகங்கள் எல்லாம் தத்தமக்கென வித்தியாசமான வேகத்தினைக் கொண்டுள்ளதால் சூரியனை சுற்றிவர வித்தியாசமான காலத்தை எடுக்கின்றன. இராசி மண்டல வலயத்தில் உள்ள 27 நட்சத்திரங்களையும் ஒரு முறை சுற்றிவர சந்திரன் சுமார் 29.53 நாட்களும்; புதன்-88 நாட்களும்; சுக்கிரன்-225 நாட்களும்; சூரியன்-365.25 நாட்களும் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்-687 நாட்களும்; வியாழன் -11.86 வருடங்களும்; ராகு-18 வருடங்களும்; கேது-18 வருடங்களும்; சனி-29.46 வருடங்களும் எடுக்கின்றன.
“அசுவினி” நட்சத்திரம் இராசிச் சக்கரத்தின் முதல் இராசியான “மேடம்”திலும், “ரேவதி” நட்சத்திரம் கடைசி இராசி யான “மீனம்” திலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம்.
இராசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கின்றது. சூரியனும், சந்திரனும் ஒவ்வொரு ராசிக்கு அதிபதி (உரிமைக்காரன்) ஆவார்கள். ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.
சூரியன் விண்மீன்: சிம்ம-ராசிக்கு அதிபதியாவார்.
சந்திரன் கிரகம்: கடகம்-ராசிக்கு அதிபதியாவார்.
செவ்வாய் கிரகம்: மேஷம்-ராசிக்கும், விருட்சிகம்-ராசிக்கும் அதிபதியாவார்.
புதன் கிரகம்: மிதுனம்-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.
குரு கிரகம்: மீனம்-ராசிக்கும், தனு-ராசிக்கும் அதிபதியாவார்.
சுக்கிரன் கிரகம்: ரிஷபம்-ராசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.
சனி கிரகம்: மகரம்-ராசிக்கும், கும்பம்-ராசிக்கும் அதிபதியாவார்.
ஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றனவோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.
ஆகவே; நாம் ஒருவருடைய ஜாதக குறிப்பைப் பார்த்து பலன் அறிய முற்படும் பொழுது கிரகங்களின் மூன்று நிலைகள் கவனிக்கப்படுகின்றன.
முதலாவதாக அவற்றின் சொந்த (உரிய) இருப்பிடம்;
இரண்டாவதாக சிசு பிறக்கும் போது கிரகங்களின் (கோசர நிலை) இருப்பிடம் (ஜாதக குறிப்பில் உள்ளவை) மூன்றாவதாக தற்போதைய இருப்பிடம் (தற்போதைய கோசர-நிலை) என்பனவாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.
Source – sahrwanavedicastrology
பயனுள்ள இணைப்புகள் இங்கே





Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Global Tamil News,Daily Tamil News, Sri Lankan News,india breaking news,Tamil online news,Tamil website,Tamil Daily News Website,Sri Lanka News Online,sri lanka news, tamil news, tamil web site,tamil news site,latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news,top news, lifestyle news, daily news update,தமிழ் செய்தி,இலங்கை செய்தி,சிறிலங்கா,இலங்கை செய்திகள்,இலங்கை தமிழ் செய்திகள்,இலங்கை செய்தி,தமிழ் செய்திகள்,tamil news today,tamil news cinema,tamil news daily,tamil news for today,tamil news jaffna,Tamil News Paper,tamil news paper,tamil news paper,Jaffna news,jaffna news today