Sunday , November 17 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள்… போலீஸ் தடையை மீறி திமுக கூட்டம்…

பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள்… போலீஸ் தடையை மீறி திமுக கூட்டம்…

சென்னை: மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய கோரியும், திமுக சார்பில் திருச்சியில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீட் தொடர்பான போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்தது.

பல ஆயிரம் தொண்டர்களும், மாணவர் அமைப்பினரும் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த பிறகு, கூட்டத்தை ரத்து செய்வது சரியா என்பது குறித்து தோழமை கட்சி தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இதில், கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. தடையை மீறி திமுக கண்டன கூட்டம் நடைபெறப்போவதால் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பால் பரபரப்பு எகிறியுள்ளது. திருச்சி மாநகர காவல் ஆணையர் சற்று முன்பு அளித்த ஒரு பேட்டியில், திமுக கூட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

திமுக கூட்டத்தில் காவல்துறை தலையிடுமா, அப்படி தலையிட்டால் விளைவுகள் என்னவாகும் என்பது குறித்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …