Monday , February 3 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தேர்தலை சந்திக்கின்ற சூழலில் தமிழகம் இல்லை

தேர்தலை சந்திக்கின்ற சூழலில் தமிழகம் இல்லை

மீண்டும் தேர்தலைச் சந்திக்கும் சூழலில் தமிழகம் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உடனே தேர்தலை சந்திக்கின்ற நிலையில் தமிழகம் இல்லை. ஓராண்டுக்கு முன்னர் தான், நாம் தேர்தலை சந்தித்து இருக்கிறோம். இரண்டு அணிகள் இணைந்திருக்கிறார்கள். சிறிது கால அவகாசம் கொடுக்கலாம். மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும் தருவதற்கு தயாராக இருக்கிறது.

அதனால் அதிமுக-வை சேர்ந்த இரு அணிகளும் இணைந்ததை போலவே வேறு ஒரு அணியும் தங்கள் தலைவி உருவாக்கிய இந்த ஆட்சிக்கு ஒரு நிரந்தர தன்மை கொடுத்து, ஆட்சி எப்படி நடக்கிறது என்பதை பார்க்கலாம்” என்றார்.

https://www.youtube.com/watch?v=rVdRyFBCVGc

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …