Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரிகாரம் மண்டபம் இடிந்து விழுந்து பெண் பலி

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரிகாரம் மண்டபம் இடிந்து விழுந்து பெண் பலி

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரிகார மண்டபம் இன்று இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பலியாகியுள்ளார். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள வள்ளி குகை அருகே உள்ள பிரகார மண்டபம் இன்று காலை 9.30 மணியளவில் இடிந்து விழுந்தது. அதில், ஒரு பெண் பலியாகி விட்டார் என செய்தி வெளியாகியுள்ளது.

கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, பக்தர்கள் பலர் அதில் சிக்கியியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது இடிபாடுகளை அகற்றும்பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …