குடகு : சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்கி உள்ள கர்நாடகா மாநிலம், குடகு சொகு ரிசார்ட்டில் முகாமிட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்காக அவர்கள் குடகு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.25 கோடி அளவிற்கு லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது புகார் உள்ளது. போக்குவரத்து துறை உதவி மேலாளரும் செந்தில் பாலாஜி ரூ.1.17 கோடி மோசடி செய்ததாக புகார் கூறி உள்ளார்.
இந்த 2 மோசடி புகார்கள் மீது செந்தில் பாலாஜியை கைது செய்வதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் குடகு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.