நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதில் தோல்வியடைந்த தமிழக அரசு மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருப்பதாகப் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறும் மசோதாவுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறத் தமிழக ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகளைக் குடியரசுத் தலைவர் தேர்தலின்போது வலியுறுத்தவும் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு, வருமானவரிச் சோதனை ஆகியவற்றில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகத் தமிழக மாணவர்களின் நலனை ஆட்சியாளர்கள் பலி கொடுத்திருப்பதாகவும் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.