நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபய தான் ஒரு சர்வாதிகாரி இல்லை எனவும் சர்வாதிகாரியாக செயற்படுகின்றேனா என்பதை எதிர்கால நடவடிக்கையின் ஊடாக மக்கள் பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அனைவரும் இணைந்து பணியாற்றவே தமிழர்கள் முஸ்லிம் மக்களுக்கு தான் அழைப்பு விடுத்ததாகவும் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பல […]
Tag: tamil news live
பேச்சு வார்த்தை நடத்த தயார் ! இரா.சம்பந்தன்
பேச்சு வார்த்தை நடத்த தயார் ! இரா.சம்பந்தன் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக்ச அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் தமிழ் மக்கள் சார்ந்த பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தாம் தயாராகவே உள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். வேட்பு மனுத்தாக்கல்கள் நிறைவு செய்யப்பட்டு பிரசாரங்கள் ஆரம்பமாகியுள்ள போதும் இதுவரையில் தேர்தல் விஞ்ஞாபனங்களும், கொள்கைத்திட்ட வெளியீடுகளும் இடம்பெறாத நிலையில் அவசரமான […]
டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பலி
டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பலி மாத்தளையில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பதினொரு வயது பாடசாலை சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குறித்த சிறுவன் கடந்த 8ஆம் திகதி மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிற்ச்சைக்காக கடந்த 10ஆம் திகதி கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அன்றைய தினம் இரவே குறித்த சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளதாக […]
கனமழை மூழ்கும் அபாயத்தில் இலங்கை நாடாளுமன்றம்!
கனமழை மூழ்கும் அபாயத்தில் இலங்கை நாடாளுமன்றம்! நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடா்ச்சியான கனமழைகாரணமாக இலங்கை நாடாளுமன்றம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சாிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வருவதோடு பெய்யும் கடும் மழையால் மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு வெள்ள அனர்த்தங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தைச் சுற்ற உள்ள தியவன்னா குளம் தற்போது வெள்ளநீரில் […]
ஞானசாரரை தீயிட்டு கொழுத்திய மக்கள்!
ஞானசாரரை தீயிட்டு கொழுத்திய மக்கள்! முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்த கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி நேற்றையதினம் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டது. அதுமாத்திரமல்லாமல் அங்கிருந்த சட்டத்தரணிகள் மீதும் மக்கள் மீதும் பிக்குகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் அதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோாியும் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஞானசார தேராின் படங்களை போராட்டத்தில் ஈடுபட்ட முல்லைத்தீவு மக்கள் தீயிட்டு எாித்துள்ளனா். முல்லைத்தீவில் […]
பாட்டாளி சம்பிகவிற்கு கோத்தா அழைப்பு
பாட்டாளி சம்பிகவிற்கு கோத்தா அழைப்பு ஜாதிக ஹெல உரிமை தலைவர் பாட்டளி சம்பிக ரணவக்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தம்முடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பிக ரணவக்கவின் கொள்கைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிறந்த இடம் என்றும் பெரமுன் கூறியுள்ளது. அத்துடன் சம்பிக ரணவக்க தற்போது வகிக்கும் மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பதவியை […]
அரசாங்கம் கோத்தபாயவை கைது செய்ய முயற்சி!
அரசாங்கம் கோத்தபாயவை கைது செய்ய முயற்சி! ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன் கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய அரசாங்கம் தற்போது பல முயற்சிகளை மேற்கொள்கின்றதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சட்டத்தை தனது தேவைக்கேற்ப உருவாக்க முடியும் என்று குறிப்பிடும் சட்டமா அதிபர் திணைக்கள சொலிஸ்டர் ஜனரால் தில்ருக்ஷி டயஸ் விக்ரமரத்ன பதவி விலக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் […]
எழுக தமிழால் மகிழ்ச்சியில் விக்கினேஸ்வரன்
எழுக தமிழால் மகிழ்ச்சியில் விக்கினேஸ்வரன் நேற்றையதினம் யாழில் முன்னெடுக்கபப்ட்டிருந்த எழுக தமிழ் பேரணி வெற்றியடைந்ததாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எழுக தமிழ் பேரணியில் வவுனியா, கிளிநொச்சி, கிழக்கு போன்ற பகுதிகளில் இருந்து பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தtஹாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவே பெரிய வெற்றிதான் என்றும் ஏனெனில், இதற்கு முன்னர் வெளிமாவட்டங்களில் இருந்து மக்களை அழைத்து வர முடியவில்லை என கூறிய அவர் இம்முறை வெளி […]
ஓமந்தையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குங்கள்
போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குங்கள் வடக்கு-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி குறித்த ஓமந்தையில் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடித்துத் தரக்கோரி முன்னெடுக்கப் படவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார். மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (27) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் வேண்டு கோள் விடுத்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு […]
பிரதமர் மாலைத்தீவு பயணம் !
பிரதமர் மாலைத்தீவு பயணம் ! பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்றே பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.




