ஐக்கிய நாடுகள் சபையின் இலட்சினை பொறிக்கப்பட்ட வாகனங்கள், மாலி இராச்சியத்தில் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு அனுப்புவதற்காக தயாரித்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த வாகனங்கள் தொடர்பில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்து தொடர்பில் எமது செய்திச் சேவை வினவியபோது, இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். அந்த வாகனங்கள், மாலி இராச்சியத்தில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு அனுப்பி வைப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை மாலிக்கு அனுப்பிவைப்பதற்கு …
Read More »இரு சகோதரிகள் சடலமாக மீட்பு…
அனுராதபுரம் – மஹவிலச்சிய – எலபத்கம பிரசேதத்தில் கிணறு ஒன்றிலிருந்து ஒரே குடும்பத்தினை சேர்ந்த இரு சகோதரிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 22 வயது மற்றும் 26 வயதுடைய குறித்த சகோதரிகளை காணவில்லை என்று, நேற்று மாலை காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய குறித்த சகோதரிகள் வசிக்கும் வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றில் இதுவரையும் சடலமாக மீட்டுள்ளனர். குறித்த சகோதரிகள் கொலை செய்யப்பட்டுள்ளார்களா என்து தொடர்பிலான …
Read More »வெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம்
இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கும், நரேந்திர மோடியுடன் மிகவும் நெருங்கமாகச் செயலாற்றி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆவலாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாகவும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். அவருக்கு, சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். …
Read More »ஐ.தே.க.வை கவிழ்க்க முடியாது!
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும். மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போது இடம்பெற்ற வண்ணமே உள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும் வரை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரளதெரிவித்தார். பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் அதுகோரள மேலும் …
Read More »விடுதலைப் புலிகளை புகழும் ஹக்கீம்
“தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை. விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காகத் தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை …
Read More »கொழும்பில் 50,000 குடும்பங்களை வெளியேற்றும் அரசாங்கம்
கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடிசையில் வாழும் குடும்பங்களை அகற்றி, வேறிடத்தில் குடியமர்த்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவர்கள் அகற்றப்படுவதன் மூலம் 400 ஏக்கர் காணியை பெற்று, வர்த்தக மற்றும் பொது தேவைகளிற்கு பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாலிகாவத்த புகையிரத திணைக்கள காணி, கெட்டராமா அப்பிள்வாட், ப்ளூமண்டல் மற்றும் இரத்மலானை நீர்ப்பாசனத் திணைக்கள காணிகளில் குடியிருக்கும் குடும்பங்களே இந்த திட்டத்தின் கீழ் அகற்றப்படவுள்ளனர். குடும்பங்களை அகற்ற 170 …
Read More »ஹிஸ்புல்லாவைச் சந்தித்த கூட்டமைப்பின் மூன்று பிரபலங்கள்!
கிழக்கு மாகாண ஆளுநரின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக நிராகரிப்பதாக தமழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் அன்மையில் தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் இன்னாள் கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய பிரதேச சபை, நகர சபை, மாநகர சபையின் தவிசாளர்கள் நகர முதல்வர்கள், மாநகர மேயர்கள் அனைவரும் ஹிஸ்புல்லாவின் அழைப்பினை புறக்கணிப்பதென மட்டக்களப்பில் இடம்பெற்ற …
Read More »யாழ் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்!
யாழ் பல்கலைகழக மாணவர்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் மீதான வழக்கை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்தி, இன்று யாழ் பல்கலைகழகத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
Read More »மன்னாரில் வெடிகுண்டுகள் மீட்பு
மன்னார் கல்லாறுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் சில வெடிபொருட்கள் இருக்கலாம் என இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கு அமைவாகக் குறித்த வீட்டினை இன்று காலை சோதனை செய்தபொழுது குறித்த வீட்டிலிருந்து 2 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டின் வேலிப்பகுதியில் கடதாசிப் பெட்டி ஒன்றிலிருந்து தமிழன் குண்டு எனச் சொல்லப்படுகின்ற விடுதலைப்புலிகளின் தயாரிப்புக் குண்டு ஒன்றும் ஆர்.பி.யி குண்டு ஒன்றுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. குறித்த குண்டை வெடிக்கவைப்பதற்கு தர்மபுரம் …
Read More »ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு சி.வி. அவசர கடிதம்
வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவொன்றை இலங்கையில் அமைக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர், ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ்க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வடக்கு கிழக்கில் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டு தமிழர் நிலங்களில் இராணுவ அனுசரணைகளுடன் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் பௌத்த மேலாதிக்கத்தை தொடர்ந்து …
Read More »
Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Global Tamil News,Daily Tamil News, Sri Lankan News,india breaking news,Tamil online news,Tamil website,Tamil Daily News Website,Sri Lanka News Online,sri lanka news, tamil news, tamil web site,tamil news site,latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news,top news, lifestyle news, daily news update,தமிழ் செய்தி,இலங்கை செய்தி,சிறிலங்கா,இலங்கை செய்திகள்,இலங்கை தமிழ் செய்திகள்,இலங்கை செய்தி,தமிழ் செய்திகள்,tamil news today,tamil news cinema,tamil news daily,tamil news for today,tamil news jaffna,Tamil News Paper,tamil news paper,tamil news paper,Jaffna news,jaffna news today