நேற்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடப்பதற்க்கு ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் சென்னையே சில மணி நேரங்கள் பதட்டத்தில் இருந்தது. இருப்பினும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போட்டி அசம்பாவித சம்பவங்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த போட்டி வரும் 20ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போட்டிக்கு நாளை டிக்கெட்டுக்கள் விற்பனையாகும் …
Read More »இன்று முதல் ஈரோடு வழியாய் மாடி ரயில்(Double decker)இயக்கம் கோவைTO சென்னை
ஐ.பி.எல் போட்டியை புறக்கணியுங்கள்
சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்குமாறு தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 10ம் தேதி ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது. காவிரி விவகாரம் பூதாகரமாகியுள்ள இந்த சூழ்நிலையில், …
Read More »சென்னையில் பல இடங்களில் போராட்டம்
காவிரி மேலாண்மை அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் திமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில், தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதேபோல் திமுக …
Read More »சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் திடீர் அனுமதி
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவொரு வழக்கமான சோதனை தான் என்றும், முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சென்னை அப்பல்லோவில் பணிபுரிவதால் அவர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய உடல்நலத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் …
Read More »சென்னையில் கமல்ஹாசனின் முதல் பொதுக்கூட்டம்
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதனையடுத்து ஆன்லைன் மூலம் அவரது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் கட்சியில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி திருச்சியில் அடுத்த பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெறும் என்று கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார். ஆனால் …
Read More »பட்டப்பகலில் மகள் கண் முன்னே தந்தை வெட்டிக் கொலை
தன்னுடைய மகளை கல்லூரிக்கு அழைத்து சென்ற நபரை பட்டப்பகலில் மர்ம கும்பல் வெட்டி சாய்த்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் கந்தன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரின் மகள் கீர்த்தனா சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை 7 மணியளவில் கீர்த்தனாவை கல்லூரியில் விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் …
Read More »மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினாவில் உண்ணாவிரத போராட்டம்
மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். இதனால் சபையில் …
Read More »சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம் ஆளுநரிடம் புகார் – ஸ்டாலின்
சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம் ஆளுநரிடம் புகார் – ஸ்டாலின் சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம். எங்களை அடித்து, உதைத்து சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள். இது குறித்து ஆளுநரிடம் நேரில் சந்தித்து புகார் தர உள்ளோம் என எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இருந்து சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், ஜனநாகய முறையில் போராட்டம் நடத்திய எங்களை தாக்கியுள்ளனர் …
Read More »மஹிந்தவுடன் இணைந்து கருணாவும் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறார் – பிரசன்னா இந்திரகுமார்
மஹிந்தவுடன் இணைந்து கருணாவும் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறார் – பிரசன்னா இந்திரகுமார் தமிழ்த் தேசியத்திற்காக போராடிய முன்னாள் பிரதியமைச்சர் கருணாஅம்மான் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முகவராக செயற்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்த துரோகத்தையே, கருணா அம்மானும் தமிழ் மக்களுக்கு செய்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால், …
Read More »