இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிப்பு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் மறைந்த முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,பிரதித் தலைவராக அனுஷா சிவராஜ், பொருளாளராக எம். ரமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று புதன்கிழமை கொட்டகலை சீ.எல்.எப் . வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது தேசிய சபை, நிர்வாக சபை ஆகியவற்றின் ஆலோசனையின் படி …
Read More »தந்தையின் பெயரில் தேர்தலில் போட்டியிடும் ஜீவன் தொண்டமான்
தந்தையின் பெயரில் தேர்தலில் போட்டியிடும் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் வாக்களிப்பு நிலையங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவால் நேற்று வெளியிடப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ், முன்னாள் அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான …
Read More »வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்
வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் இன்று (04.06.2020) மாலை 5 மணிக்கு கையொப்பமிட்டார். கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் (சி.எல்.எப்) நடைபெற்ற இதற்கான நிகழ்வில் இ.தொ.கா.வின் பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜா, உப தலைவர் செந்தில் தொண்டமான், பொருளாளர் மருதபாண்டி ரமேஷ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுரை உட்பட இ.தொ.கா.வின் உயர்மட்ட பிரமுகர்கள் …
Read More »தொண்டமானின் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்
தொண்டமானின் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இ.தொ.கா.வின் உப தலைவர் செந்தில் தொண்டமான் இன்று தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக செந்தில் தொண்டமான் கூறினார். இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய …
Read More »