Wednesday , March 27 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிப்பு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர்  மறைந்த முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,பிரதித் தலைவராக அனுஷா சிவராஜ், பொருளாளராக எம். ரமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று புதன்கிழமை கொட்டகலை சீ.எல்.எப் . வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது தேசிய சபை, நிர்வாக சபை ஆகியவற்றின் ஆலோசனையின் படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் ஏகமனதாக நியமனம் செய்யப்பட்டார். அத்துடன் பொதுச் செயலாளர் பதவியை வகித்த அனுசா சிவராஜா பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …